மருத்துவக் கல்லூரி நோயாளர் வார்டில் எலிகள் அட்டகாசம்; உ.பி. அரசை விமர்சித்துள்ள காங்கிரஸ்..!
The Congress party has criticized the Uttar Pradesh government over the menace of rats in the medical colleges patient ward
உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு நோயாளர் வார்டில் எலிகள் சுற்றித்திரியும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ளது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோண்டா மருத்துவக் கல்லூரியின் இந்தக் காட்சியைக் கவனியுங்கள். இங்கே, மனிதர்களுக்காக ஒதுக்கப்பட்ட வார்டில், எலிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த எலிகள் குண்டாகவும், மெலிந்தும், உருண்டையாகவும் என அனைத்து வகையான எலிகளும் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றன என்றும், இந்த மருத்துவக் கல்லூரி வார்டு மனிதர்களுக்கானது அல்ல, எலிகளுக்கானது என்பது போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துகிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
உ.பி. இல் உள்ள கோண்டா மருத்துவக் கல்லூரியின் எலும்பியல் வார்டில், நோயாளிகளின் படுக்கைகளுக்கு அருகிலும், ஆக்சிஜன் குழாய்கள் மீதும் எலிகள் ஓடும் காட்சிகள் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிரியங்கா நிரஞ்சன் மருத்துவக் கல்லூரி முதல்வரை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளார். அத்துடன், உடனடியாக வார்டில் பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நோயாளிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் சிதறும் உணவுத் துண்டுகள் காரணமாகவே எலிகள் அதிகளவில் வருவதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அத்துடன், உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனைகளில் எலிகள் உலா வருவது இது முதல் முறையல்ல. பலமுறை இதுபோன்ற புகார்வது வந்துள்ளது.
இதேபோன்று, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் ஜபல்பூர் மருத்துவமனைகளிலும் சமீப காலங்களில் எலித் தொல்லை மற்றும் நோயாளிகளை எலிகள் கடித்த புகார்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The Congress party has criticized the Uttar Pradesh government over the menace of rats in the medical colleges patient ward