சட்டவிரோத ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டுமா..? தலைமை நீதிபதி கேள்வி..! - Seithipunal
Seithipunal


போலீஸ் காவலில் இருந்த ரோஹிங்கியா அகதிகள் 05 பேர் மாயமாகிவிட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து நாடு கடத்த உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா..? என உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது: முதலில் அகதிகள் சட்ட விரோதமாக எல்லை தாண்டி ஊடுருவுகின்றனர். சுரங்கம் தோண்டி அல்லது வேலியை தாண்டி உள்ளே வருகின்றனர். பிறகு நீங்கள், நாங்கள் உள்ளே வந்துவிட்டோம். உங்கள் சட்டம் எங்களுக்கு பொருந்த வேண்டும் என சொல்கிறீர்கள். எனக்கு உணவு, தங்குமிடம் கிடைக்க உரிமை உண்டு. குழந்தைகளுக்கு கல்வி பெற தகுதி உண்டு என நினைக்கின்றீர்கள். உங்களுக்காக சட்டம் வளைய வேண்டும் என விரும்புகிறீர்களா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் அவர்களும் குடிமகன்கள். இந்த சலுகைகள் மற்றும் பலன்கள் அவர்களுக்கு பொருந்தாதா?  என்றும், ஒரு அகதிக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லாமல் இருந்தால், சட்டவிரோதமாக ஊடுருபவர்களை, அவரை இங்கேயே வைத்திருக்க முடியுமா..? என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வட மாநிலங்களில் நமக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த எல்லை உள்ளதாகவும், ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா..?  உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Justice asked whether the red carpet should be rolled out for illegal immigrants


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->