மத்திய அரசு எச்சரிக்கை: பிரதமர் பேசுவது போல் AI வீடியோ; யாரும் நம்பி ஏமாற வேண்டாம்..!
The central government has warned that no one should be fooled by believing in an AI video of the Prime Minister speaking
கடந்த சில மாதங்களாக, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதுபோல, ஏ.ஐ., தொழில்நுட்பத்தைபயன்படுத்தி போலி வீடியோக்களை தயாரித்து, பதிவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், 'நாட்டு மக்களுக்காக ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளேன்; இதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்' என, பிரதமர் நரேந்திர மோடி பேசுவது போன்ற போலி செயற்கை நுண்ணறிவு ?(AI) வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதை உண்மை என நம்பி, பலரும் பணம் கட்டி ஏமாறும் நிலை உருவாகியுள்ளது. அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசுவது போல் கூறப்பட்டுள்ளதாவது:

'நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில், ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன். இதில் ஒரு முறை, 21,000 ரூபாய் முதலீடு செய்தால் போதும். அந்த வாரமே உங்கள் வங்கி கணக்கில், 1.6 லட்சம் ரூபாய் வரும். இந்த திட்டத்தில் சேர, இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.' என்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் நபர்களை கண்டறிந்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைபர் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 'இதேபோன்று உலா உரும் வீடியோக்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்' என, அரசு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
The central government has warned that no one should be fooled by believing in an AI video of the Prime Minister speaking