சொந்த கிராமத்திற்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது பயங்கர விபத்து..ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!
The accident took place when he was returning from his native village Three members of a family killed
உத்தர பிரதேசத்தில் ரேபரேலி மாவட்டத்தில் சொந்த கிராமத்திற்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தில் ரேபரேலி மாவட்டத்தில் வசித்து வந்த 68 வயதான சதீஷ் மவுரியா. 56 வயதுடைய இவருடைய மனைவி ஊர்மிளா மவுரியா . 33 வயதான மகன் ஹர்திக் மவுரியா,32 வயதான அவருடைய மனைவி மோகினி கனவுஜியா ஆகியோர் சம்பவத்தன்று காரில் சொந்த கிராமத்துக்கு புறப்பட்டுள்ளனர்.
அப்போது இவர்கள் மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள ஜிந்த் என்ற சொந்த கிராமத்திற்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பினர். அப்போது, மகோபா மாவட்டத்தில் பரிபுரா கிராமத்தில் கப்ராய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கான்பூர்-சாகர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது, அவர்களுடைய கார், லாரி ஒன்றின் மீது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில், கார் அப்பளம் போல் நொருக்கிங்கியது .இதில் சதீஷ், அவருடைய மனைவி, மருமகள் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மகோபா மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் ஹர்திக் தவிர அனைவரும் உயிரிழந்து விட்டனர். ஹர்திக்கிற்கு முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஜான்சி மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். சொந்த கிராமத்திற்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
The accident took place when he was returning from his native village Three members of a family killed