தாம்பரம் - எர்ணாகுளம் சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை கோவிலில், ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதற்காக பல மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்களை வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தெற்கு ரெயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- "சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 

இந்த வாராந்திர சிறப்பு ரெயில், எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து நவம்பர் மாதம் 28 ந்தேதி, டிசம்பர் மாதம் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி மாதம் இரண்டு ஆகிய தேதிகளில் மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். 

அதேபோல், தாம்பரத்திலிருந்து வாராந்திர சிறப்பு ரெயில், நவம்பர் மாதம் 29, டிசம்பர் மாதம் 6, 13, 20, 27, மற்றும் ஜனவரி மாதம் மூன்று ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை அடையும். 

இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளை யம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர் மற்றும் கோட்டயம் வழியாக எர்ணா குளத்தை சென்று அடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான பயணசீட்டு முன்பதிவு இன்று ஆரம்பமாகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thambaram to ernakulam special train south railway information


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->