பரபரப்பு உச்சம்...! சபரிமலை தங்கம் கொள்ளை: மூன்று மாநிலங்களில் ED அதிரடி சோதனை! - தந்திரி கைது - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் துவாரபாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசங்களும், நிலைக்கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகளும் கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் நகைச் செப்பனிடும் நிறுவனத்தில் பளபளப்பூட்டும் பணிக்காக அனுப்பப்பட்டன.

ஆனால் அந்தச் செயல்முறை முடிந்த பிறகு 4.54 கிலோ தங்கம் மர்மமான முறையில் “காற்றில் கரைந்தது” போல காணாமல் போனதாக புகார் எழுந்தது.இந்தப் பெரும் சர்ச்சை வழக்கை தீவிரமாக விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்மகுமார், வாசு, நிர்வாக அதிகாரிகள் ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன், முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்ட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் அடுத்தடுத்து கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

மேலும், இந்த வழக்கில் அதிர்ச்சி தரும் திருப்பமாக, சபரிமலை ஐயப்பன் கோவிலின் மூத்த தந்திரி கண்டரரு ராஜீவருவையும் சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. தங்கக் கடத்தல் சதிக்கு தந்திரியும் மறைமுகமாக உதவியிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே நேரத்தில் 21 இடங்களில் பரபரப்பான சோதனை வேட்டையை தொடங்கியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு முழுவதும் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் உள்ள ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ அலுவலகத்திலும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி, இந்த வழக்கு மீண்டும் தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tension at its peak Sabarimala gold heist ED conducts surprise raids three states Tantri arrested


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->