அதிகாலையில் பேரதிர்ச்சி : கோவில் சுவர் இடிந்து விழுந்து பக்தர்கள் 9 பேர் பலி!
Temple wall collapses 9 devotees killed
ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ வராஹ லட்சுமி நரசிம்ம கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பகதர்கள் வருகை தருவது வழக்கம்.குறிப்பாக இந்தக்கோவிலுக்கு பண்டிகை காலங்களில் அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் முதல் தரிசனத்திற்காக வருகை தருவார்கள். அதன்படி இன்று பண்டிகை நாள் என்பதால் அதிகாலையில் பல பக்தர்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. அப்போது இந்த மழையால் கோவிலின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் பலர் காயமடைந்தனர்.
உடனடியாக இது குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் சில பக்தர்களை மீட்புக்குழுனர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.படுகாயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.கோவில் தரிசனத்திற்காக வந்தவர்கள் தற்போது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Temple wall collapses 9 devotees killed