ஹைதராபாத் அருகே தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் ரயில்! பயணிகள் நிலை என்ன?! 
                                    
                                    
                                   telangana hyderabad train fire accident
 
                                 
                               
                                
                                      
                                            தெலங்கானாவில் பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  
தீவிபத்தை தொடர்ந்து பயணிகள் உடனடியாக இறங்கியதால் உயிர் தேசம் தவிர்க்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே பொம்மைபள்ளி முதல் பகிடிபள்ளி வரை இயக்கப்பட்டுவரும் ஃபுலக்னுமா விரைவு ரயிலில் பயணிகள் இருந்த பெட்டிகள் திடீரென தீப்பற்றி உள்ளது.
தீப்பற்றிய உடன் ரயிலில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால், உயிர்சேதம், காயம் ஏற்படவில்லை என ரயில்வே காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       telangana hyderabad train fire accident