நாடக காதலனால் ரத்தம் தெறிக்க கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து! - Seithipunal
Seithipunal


தெலங்கானாவில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவி தேர்வெழுத வந்தபோது இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதுகுறித்த முதல்கட்ட தகவலின்படி, மேடக் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணவி, ஆன்லைனில் இளைஞர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று மாணவி தேர்வுக்காக கல்லூரி வந்திருந்த நிலையில், அவரிடம் அந்த இளைஞர் தனது காதலை வெளிப்படுத்தியதாக தெரிகிறது.

ஆனால், மாணவி காதலை ஏற்க மறுக்கவே, அந்த இளைஞர் ஆத்திரமடைந்து கத்தியைக் கொண்டு மாணவியை சரமாரியாக குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.

பலத்த காயமடைந்த மாயாவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவியை கொலை செய்ய முயன்ற இளைஞர் தலைமறைவாக உள்ள நிலையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telangana College girl attacked


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->