கேரள பள்ளியில் சர்ச்சை; சுதந்திர வினாடி வினா போட்டி வினாத்தாளில் சாவர்க்கர் பற்றி கேள்வி; ஆசிரியர் சஸ்பெண்ட்..! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆகஸ்ட் 06 -ஆம் தேதி அன்று, சமூக அறிவியல் மன்றம் சார்பில் 'சுதந்திர வினாடி வினா 2026' போட்டி நடைபெற்றது.

ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான வினாத்தாளில் ஐந்தாவது கேள்வியாக, "ஆங்கிலேயர்களிடம் அதிகபட்ச தண்டனையைப் பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் யார்?" எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அத்துடன், அதற்கு 'சாவர்க்கர்' என்பது பதிலாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

தற்போது இந்த கேள்வி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் மாநில கல்வித் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது.

இந்த வினாத்தாளைத் தயாரித்த ஆசிரியர் குழுவுக்குப் பல்லத்தட்கா பள்ளி ஆசிரியர் குரு பிரசாத் தலைமை தாங்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் பரிந்துரைத்த நிலையில், ஆசிரியர் குரு பிரசாத் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

மேலும், கல்வித் துறையில் 'சங் பரிவார்' நிகழ்ச்சி நிரல் புகுத்தப்படுவதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், சாவர்க்கர் அதிக காலம் சிறைத் தண்டனை அனுபவித்தது வரலாற்று உண்மை என்று பாஜக மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் கூறியுள்ளார்.

இதற்கு நீதிமன்றத்தின் மூலம் தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஆசிரியர் குரு பிரசாத் நிரூபிப்பார் என்று கூறியுள்ள சுரேந்திரன், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teacher suspended in Kerala school for asking question about Savarkar in question paper


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->