அடேங்கப்பா: தமிழகத்தில் இத்தனை கோடி வாக்காளர்களா..? தெளிவான விவரங்களை வெளியிட்டது தேர்தல்  ஆணையம்.! - Seithipunal
Seithipunal


இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டது. 

இன்று வெளியான தமிழக இறுதி வாக்காளர் பட்டியலின் படி தமிழகத்தில் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,02,54,172 பேரும், பெண் வாக்காளர்கள் 3,10,45,969 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 6,474 பேர் உள்ளனர்.

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6,60,317 வாக்காளர்கள் உள்ளதாக டெஹ்ரதல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க உள்ளோர் www.nvsp.in  என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், கூகிள் பிளே ஸ்டோரில் voter helpline என்ற App ஐ டவுன்லோடு செய்து அதன்மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கும் நிலையில் இது தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் இன்னமும் இறுதி வாக்காளர் பட்டியலை தயார் செய்து வெளியிடவில்லை. 

இறுதி வாக்காளர் பட்டியல் இன்னும் தயாராகாததால் எங்களால் மாநகராட்சி, நகராட்சி  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்க முடியவில்லை என நேற்று மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tamilnadu total voters details announced by election commission


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->