கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் செயலாளராக தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேந்திர சோழன் ஐஏஎஸ். நியமனம்..! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் செயலாளராக மதுரையை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக முதல்வராக பதவி வகித்த சித்தராமையா பதவி விலகியதை அடுத்து அம்மாநிலத்தில் புதிய முதல்வராக துணை மூத்தவராக இருந்த டி.கே.சிவகுமார் நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வரானதும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி முதல்வரின் நிதி ஆலோசகரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எல்.கே.அத்தீக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டி.கே.சிவகுமார் க‌ர்நாடக துணை முதல்வராக இருந்த போது அவரது செயலாளராக இருந்த‌ ராஜேந்திர சோழன் ஐஏஎஸ், முதல்வரின் செயலாளராக இட‌மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

ராஜேந்திர சோழன் ஐஏஎஸ்

மதுரை மாவட்டம் அழகப்பம்பட்டியை சேர்ந்த இவர் கடந்த 2008-ஆம் ஆண்டில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்திய அளவில் 31-வது இடம் பிடித்த இவர், கர்நாடகாவில் பணிக்கு சேர்ந்தார்.

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையின் இயக்குநராகவும், கர்நாடக மின்சார கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் மற்றும் கூடுதல் தலைமை தேர்தல் ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். டி.கே.சிவகுமாரின் நன்மதிப்பை பெற்ற ராஜேந்திர சோழனுக்கு, பெங்களூரு மத்திய மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் பதவியை வழங்கினார்.

இந்நிலையில், டி.கே.சிவகுமார் முதல்வரானதும், தனக்கு விருப்பமான ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திர சோழனை தனது செயலாளராக நியமித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil IAS officer appointed as Secretary to Karnataka Chief Minister DK Shivakumar


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->