கர்நாடக காங்கிரஸ் தலைவரானார் பி.கே.ஹரிபிரசாத்; செயற்குழு உறுப்பினராக சித்தராமையா நியமனம்..! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா பதவி விலக்கியதையடுத்து துணை முதல்வராக இருந்து டி.கே, சிவகுமார் நேற்று முன் தினம் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே.சிவகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து,  பி.கே.ஹரிபிரசாத் அம்மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று விடுத்த அறிவிப்பில்; ''காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பி.கே.ஹரிபிரசாத்தை கர்நாடக மாநில தலைவராக நியமித்தார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது'' என தெரிவித்து இருந்தார்.

ஒபிசி பிரிவை சேர்ந்த பி.கே.ஹரிபிரசாத் (71) கல்லூரி மாணவ பருவத்தில் இருந்து காங்கிரஸில் உள்ளார். இவர் 04 முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்துள்ளார். காங்கிரஸில் ஒபிசி பிரிவினரின் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி எழுப்பி வந்தார். இதனால் 23 ஆண்டுகளுக்கு பிறகு ஒபிசி பிரிவை சேர்ந்த அவரை தலைவராக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. அவருக்கு முன்பு, 2003-இல் ஜனார்த்தன பூஜாரி அந்த பொறுப்பை வகித்துள்ளார்.

கடந்த 28-ஆம் தேதி  கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையாவை செயற்குழு உறுப்பினராக நியமித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PK Hariprasad becomes Karnataka Congress chief


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->