அட ச்சா..! சர்வதேச போட்டிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம்! -யோகா சங்க செயலாளர் சிக்கினார் - Seithipunal
Seithipunal


கர்நாடகா பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் இயங்கி வந்த யோகா பயிற்சி மையம் அதிர்ச்சிக்குரிய பாலியல் குற்றச்சாட்டால் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.கடந்த 2019 முதல் யோகா பயிற்சி மையம் நடத்தி வந்தவர் நிரஞ்சனாமூர்த்தி. இவர் கர்நாடக யோகா சங்கத்தின் செயலாளராகவும் இருந்தார்.

இதில் 2021ஆம் ஆண்டு, 15 வயது சிறுமி யோகா கற்க அந்த மையத்தில் சேர்ந்தார். பிறகு 2023இல் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்ற நிரஞ்சனாமூர்த்தி, அங்கு அவளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்பின் யோகா மையத்துக்குச் செல்வதை சிறுமி நிறுத்தியிருந்தார். ஆனால் 2024இல் அவர் சேர்ந்து கொண்ட புதிய யோகா மையமும் நிரஞ்சனாமூர்த்தி நடத்தும் மையமே என பின்னர் தெரியவந்தது. பதக்கம் வாங்கித் தருவதாக ஆசை காட்டி, சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதத்திலும் மையத்திலேயே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்விபரங்கள் பெற்றோருக்குத் தெரிய வந்ததும், அவர்கள் அதிர்ச்சியடைந்து, ராஜராஜேஸ்வரி நகர் காவலில் புகாரளித்தனர். அதன்பேரில் நிரஞ்சனாமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவலில் அவரை கைது செய்தனர்.

மேலும், யோகா சங்க செயலாளராக இருந்தவர் மீது வந்துள்ள இக்குற்றச்சாட்டுகள், மேலும் பல மாணவிகளும் பாதிக்கப்பட்டிருக்கலாமா என்ற பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தற்போது நிரஞ்சனாமூர்த்தியிடம் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Taking her international competition and raping her Yoga Association Secretary caught


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->