சுவீஸ் வங்கியில் பணம் செலுத்திய வழக்கில் கைதான புனே தொழிலதிபர் ஹசன் அலிகான் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் ஹசன் அலிகான். இவருக்கு சொந்தமான இடத்தில் வருமான வரித்துறையினர் கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் சோதனை மேற்கொண்டனர். 

அந்த சோதனையின் போது ஹசன் அலிகான் சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.36 ஆயிரம் கோடி பணம் போட்டதற்கான ஆவணம் ஒன்று சிக்கியது. இதையடுத்து, அமலாக்கத்துறை ஹசன் அலிகானை கடந்த 2011-ம் ஆண்டு சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்தது. 

சுமார் நான்கு ஆண்டுகள் ஜெயிலில் இருந்த ஹசன் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்தார். இதற்கிடையே அலிகானின் சுவிஸ் வங்கி கணக்கு தொடர்பாக வருமான வரித்துறை, சி.பி.ஐ.யும் விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் ஹசன் அலிகான் கடந்த வியாழக்கிழமை ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் காலை அவரது உடல் புனே கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக ஹசன் அலிகானின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்ததாவது,

" மத்திய விசாரணை துறைகள் தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால், ஒரு அப்பாவியின் வாழ்க்கை எப்படி வீணாகும் என்பதற்கு உதாரணம் ஹசன் அலிகானுடைய வழக்கு.

இது சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு என்றால், பணம் எங்கே?. ஹசன்அலிகான் வழக்கை நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும். அப்போது தான் அவருக்கு நீதி கிடைக்கும் " என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suvees bank money deposite case business man hasan alikhan death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->