'தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் கிராமங்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டும்': தேசிய அளவி​லான சீரான கொள்​கை வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தனி​யார் அல்​லது நிகர்​நிலைப் பல்​கலைக்​கழகங்​களில் தனி​யார் ஒதுக்​கீட்டு இடங்​களின் கீழ் பயிலும் மருத்​துவ மாணவர்​களும் ஓராண்டு காலத்​துக்கு கிராமப்​புறங்​களில் பணி​யாற்​றி​னால் மட்டுமே மருத்​து​வ​ராக பதிவு செய்ய முடி​யும் என்ற அரசாணையை கர்​நாடக அரசு வெளி​யிடப்​பட்​டது.

இந்த அரசாணையை எதிர்த்து வழக்​கு​கள் தொடரப்பட்டது. உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பி.எஸ்​.நரசிம்​மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு குறித்த விசா​ரணைக்கு வந்​த​து. அப்போது கிராமப்​புறங்​களில் பணி​யாற்​று​வ​திலிருந்து தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​களுக்கு ஏன் விலக்​களிக்​கப்பட வேண்​டும்? என கேள்வி எழுப்​பினர்.

அதற்கு மனு​தா​ரர்​கள் தரப்பில் வாதிடுகையில், தனி​யார் ஒதுக்​கீட்டு இடங்​களின் கீழ் சேர்ந்து மிக அதி​கக் கட்​ட​ணம் செலுத்தி மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்​கள், அரசி​யல் சாசனத்​தின் 14-வது பிரி​வின் கீழ் சேர்க்​காமல் ''தெளி​வாக வேறு​படுத்​திக் காணக்​கூடிய ஒரு தனிப்​பிரி​வாக'' கருதப்பட வேண்​டும் என்​றும், அவர்​களை கிராமப்​புறங்​களில் கட்​டாயப் பணி செய்ய வேண்டுமென்ற நிபந்​தனைக்கு உட்​படுத்​தப்​படக் கூடாது எனவும் கூறப்பட்டது.

ஆனால், அந்த வாதத்தை நீதிப​தி​கள் அமர்வு ஏற்க மறுத்துள்ளது. அத்துடன், கிராமப்புறங்களில் மருத்​துவ மாணவர்​கள் பணி​யாற்​று​வதை கட்டாய​மாக்க தேசிய அளவில் ஒரு சீரான கொள்கை இருக்க வேண்​டும் என்றும்நீதிபதிகள் தெரி​வித்​துள்ளனர்.

அப்​போது பேசிய, மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்​தா, நாடு தழு​விய இத்​தகைய கொள்​கையை வகுப்​பது தொடர்​பாக மத்​திய அரசிட​மிருந்து உரிய அறி​வுறுத்​தல்​களைப் பெற்​றுத் தெரி​விப்​ப​தாக கூறி​னார்.

இதனைத் தொடர்ந்து நீதிப​தி​கள், மருத்​துவ மாணவர்​கள் கிராமப்​புறங்​களில் பணி​யாற்​று​வதை கட்​டாய​மாக்​கும் வகை​யில் தேசிய அளவி​லான சீரான கொள்​கையை வகுப்​பது குறித்து 03 வாரத்​தில் மத்​திய அரசு பதிலளிக்​க வேண்​டும்​ என உத்​தர​விட்​டு வழக்​கை தள்​ளி வைத்​துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court orders that private college medical students must also work in villages


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->