கன்வர் யாத்திரைக்கே தடை., பக்ரீத்க்கு ஊரடங்கு லீவா?.! கேரள அரசு பதில் சொல்ல உச்சநீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பக்ரீத் பண்டிகைக்கு ஊரடங்கில் விலக்கு அளித்த கேரள மாநில முதல்வரின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மாநில அரசு பதிலளிக்க டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரள மாநிலத்தில் அதிகரித்து வந்த கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் சூழ்நிலைக்கேற்ப தளர்வுகள் வழங்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட மலப்புரம் மற்றும் திருவனந்தபுரத்தில் மாறி மாறி ஊரடங்குகள் கடுமையாக்கப்பட்டது. 

ஆனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அம்மாநில முதல்வர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு கூடுதல் தளர்வுகள் வழங்கி உத்தரவிட்டார். மேலும், 3 நாட்கள் எந்த விதமான ஊரடங்கு உத்தரவுகளும் அமலில் இருக்காது என்றும் தெரிவித்தார். இதனால் பகீரித் பண்டிகையை கொண்டாடும் முஸ்லீம் மக்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். 

இந்நிலையில், இன்றைய தினத்தை பொறுத்த வரையில் அம்மாநிலத்தில் கொரோனா பரவல் 16,148 என்ற நிலையில் உள்ளது. இதனால் கேரள அரசின் அறிவிப்புக்கு எதிராக டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஏற்கனவே, உத்திரபிரதேசம் மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கன்வர் யாத்திரைக்கு அங்குள்ள மாநில அரசுகள் அனுமதி வழங்கி, பின்னர் உச்சநீதிமன்றத்தின் கண்டிப்புகளுக்கு பின்னர் அதனை வாபஸ் பெற்றது. இந்நிலையில், கேரளாவிலும் இதுபோன்ற தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இன்று கன்வர் வழக்கு விசாரணை நீதிபதிகள் அமர்வில் வந்த நிலையில், கேரளாவின் ஊரடங்கு தளர்வு தொடர்பான விவகாரத்தையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக கேரள மாநில அரசு நாளைக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court Condemn Kerala Govt Leave for Lockdown Bakri Eid Celebration 19 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->