சந்தோஷ பூரிப்பு .. துள்ளல் நடனம்.. சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்த சுனிதா வில்லியம்ஸ்! - Seithipunal
Seithipunalகடந்த புதன்கிழமை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலம் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் புறப்பட்டுச் சென்றனர்.

இந்த போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ்-5 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் இந்திய நேரப்படி ஜூன் 6 வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தது போயிங் ஸ்டார்லைனர் விண்கலம். 

இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் உற்சாகமான மனநிலையில், துள்ளலாக நடனமாடியபடியே சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். மேலும் அங்குள்ள சக விண்வெளி வீரர்கள் சுனிதாவை ஆரத்தழுவி வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்று போயிங் ஸ்பேஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் சென்ற பேரி வில்மோர் இருவரும் அங்கு ஒரு வாரகாலம் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஸ்டார்லைனர் விண்கலத்தை நாசாவுக்காக போயிங் நிறுவனம் வடிவமைத்துள்ளளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நாசா இந்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்புவது குறித்து திட்டமிட்டு வந்தது. ஆனால் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இப்போது தான் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது ஸ்டார்லைனர் விண்கலம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sunitha Williams in International Space Station


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->