வானில் பறந்தபோது பயங்கரம்! சுவிட்சர்லாந்து விமானத்தில் திடீர் தீ விபத்து...! 6 பயணிகள் படுகாயம் - டெல்லியில் பரபரப்
Sudden fire accident Swiss plane 6 passengers seriously injured Delhi panic
தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இன்று அதிகாலை பதற்றநிலையை சந்தித்தது. சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரத்தை நோக்கி புறப்படவிருந்த ஸ்விஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எல்.எக்ஸ் 147 விமானம், புறப்பாட்டிற்காக ரன் வேயில் தயார் நிலையில் இருந்தபோது எதிர்பாராத கோளாறு ஏற்பட்டது.

மேலும், விமானத்தின் லேண்டிங் கியர் பகுதியில் திடீரென அடர்ந்த புகை எழுந்ததுடன், மற்றொரு பகுதியின் அருகே சிறிய தீப்பற்றும் காணப்பட்டதால் அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
கணநேரத்தில் நிலைமை தீவிரமடையும் முன், விமானத்தின் புறப்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணிகள் அவசர முறையில் வெளியேற்றப்பட்டனர்.இந்த பரபரப்பான தருணத்தில், குறைந்தது 6 பயணிகள் லேசான காயங்களுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆரம்பக்கட்ட தகவல்களின் படி, விமானத்தின் ஒரு என்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த புகை மற்றும் தீப்பற்றுக்கு காரணமாக இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
அதிகாலை சுமார் 2 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தையடுத்து, விமான நிலையத்தில் முழுமையான அவசர நிலை அறிவிக்கப்பட்டு, தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய விமானம் ஏர்பஸ் A330-343 வகையைச் சேர்ந்ததாகும். அதில் 232 பயணிகளும் 13 பணியாளர்களும் பயணம் செய்துகொண்டிருந்தனர். விரைவான நடவடிக்கையால் பெரிய பேரழிவு தவிர்க்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Sudden fire accident Swiss plane 6 passengers seriously injured Delhi panic