வரலாற்றில் இன்று: இந்திய வானியல் ஆராய்ச்சியாளர்.! - Seithipunal
Seithipunal


சுப்பிரமணியன் சந்திரசேகர்: 

இந்திய வானியல் ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் 1910ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தார்.

ஒரு நட்சத்திரம் எரிபொருள் தீர்ந்த பிறகு, அடர்ந்த பொருண்மையாக மாறுகிறது என்று கணக்கீட்டு ஆய்வு மூலம் வெளிப்படுத்தினார். சூரியனின் நிறையைவிட 1.4 மடங்குக்கு மேல் இருக்கும் நட்சத்திரம், தனது நிலைத்தன்மையை இழக்கும் எனக் கண்டறிந்தார். இந்தக் குறிப்பிட்ட நிறை அளவு 'சந்திரசேகர் லிமிட்" எனப்படுகிறது.

இவர் தனது அனைத்து ஆராய்ச்சிகளையும் தொகுத்து 'நட்சத்திரங்களின் அமைப்பு" என்ற நூலாக வெளியிட்டார். பத்மவிபூஷண், அமெரிக்க அறிவியல் கழகத்தின் ஃபோர்ட் பதக்கம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் 'ஆடம் பரிசு", ராயல் சொசைட்டியின் 'காப்ளே பதக்கம்" உட்பட பல்வேறு விருதுகள், பதக்கங்கள் பெற்றுள்ளார்.

நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுக்காக 1983ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஆராய்ச்சியாளர், ஆசிரியராக விளங்கிய சுப்பிரமணியன் சந்திரசேகர் 1995ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

subrahmanyan chandrasekhar birthday


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->