இன்றும் கூட உலகத்தில் சிறந்த நாடு இந்தியா: விண்வெளியில் இருந்து சுபான்ஷு சுக்லா பெருமிதம்..! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் 25-ந்தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் விண்வெளியில் பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்களுடைய 14 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, நாளை பூமிக்கு திரும்பவுள்ளனர். இதற்காக, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தின் கதவுகள் இந்திய நேரப்படி பகல் 02:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து பகல் 02.25 மணிக்கு சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 04 பேரும் விண்கலத்திற்குள் நுழைய உள்ளனர்.

அதனை தொடர்ந்து மாலை 04.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்படும். மாலை 04.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கும். சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு வருகிற 15-ந்தேதி பகல் சுமார் 03 மணி அளவில் பூமியை வந்தடையவுள்ளது.

இந்த விண்கலம், வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க கடற்படையும் தயாராகவுள்ளது.

நாளை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்பவுள்ள நிலையில் அவர்களுக்கு, பிரிவு உபசார நிகழ்ச்சி ஒன்று இன்று நடத்தப்பட்டது. அப்போது சுக்லா பேசும் போது கூறியதாவது: எனக்கு இது மேஜிக் போன்று இருக்கிறது. எனக்கு கிடைத்த மிக அற்புதம் வாய்ந்த பயணம் இது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,விண்வெளியில் இருந்து பார்க்கும்போது,  இன்றும் கூட பாரதம் (இந்தியா), உலகத்தில் சிறந்த நாடாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் 1984-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவும் இதே வார்த்தைகளை குறிப்பிட்டு இருந்தார் என்பது நிலையில் கொள்ளத்தக்கது.

மேலும், விண்வெளியில் இருந்து பார்க்கும் போது, இந்தியா லட்சியம் நிறைந்த, அச்சமற்ற, நம்பிக்கை வாய்ந்த மற்றும் பெருமை மிகுந்த நாடாக காணப்படுகிறது என்றும் சுக்லா கூறியுள்ளார். அத்துடன், 'என்னுடன் நிறைய நினைவுகளை சுமந்து வருகிறேன். அதனை என்னுடைய நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்' என்றும் பெருமிதமாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Subhanshu Shukla proudly says from space that India is still the best country in the world


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->