செம்ம அடி! தன்னிடம் சீண்டிய வாலிபனை காலரை பிடித்து வெளுத்து வாங்கிய மாணவி..! - வைரல் வீடியோ - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் நகரில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பள்ளி மாணவியை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்துள்ளார்.அத்துடன், தகாத வார்த்தைகளால் மாணவியிடம் பேசியும் வந்துள்ளார். இது பல தினங்களாக நீடித்து வந்த நிலையில், பொறுத்து பார்த்த அந்த மாணவி ஒரு கட்டத்தில் தெருவில் வைத்து, அந்த வாலிபரின் சட்டை காலரை பிடித்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தனது காலணிகளை எடுத்து அடித்தும், கன்னத்தில் அறைந்தும் தகுந்த பாடம் புகட்டினார்.இந்த காட்சியை,பொதுமக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததுடன், சிலர் வீடியோவாக பதிவு செய்தனர். அந்த மாணவி,பெரிய கல் ஒன்றை எடுத்து, தொல்லை கொடுத்த அந்த வாலிபரை அடிக்கவும் பாய்ந்துள்ளார். பிறகு,கல்லை கீழே போட்டு விட்டார்.இந்த நிலையில், கங்காகட் கொத்வாலி காவல் நிலைய பகுதியில் போனி சாலையில் அந்த வாலிபர் மீண்டும், பள்ளி மாணவியை மறித்து, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

மேலும், தன்னுடன் வரும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவி மீண்டும் வாலிபரை சட்டையை பிடித்து தாக்கினார்.எனினும், இதுபற்றி அந்த பள்ளி மாணவி காவலில் புகாரளிக்க மறுத்து விட்டார். அமைதியை சீர்குலைக்க முயற்சித்த பிரிவில் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை காவலர்கள் பிடித்து சென்றனர்.

அந்நபர் ஆகாஷ் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் ஈ-ரிக்சா ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

இதுபற்றிய வீடியோ நேற்று வைரலானது. இதுபற்றி கங்காகட் கொத்வாலி காவல் நிலையத்தின் உயரதிகாரி பிரமோத் குமார் மிஷ்ரா தெரிவிக்கும்போது," உன்னாவ் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற அந்த வாலிபருக்கு எதிராக, மாணவி புகார் எதுவும் அளிக்கவில்லை. ஆனால், அமைதியை சீர்குலைக்க முயற்சித்த பிரிவில் வழக்கு பதிவாகியுள்ளது.

இதனால் கைது செய்து, அன்றிரவே ஜாமீனில் ஆகாஷ் விடுதலையானார்" என்று தெரிவித்துள்ளார்.அப்பகுதியை சேர்ந்த சிலர் தெரிவிக்கும்போது, பெண்களை சீண்டி, தகாத வார்த்தைகளால் பேசி செல்லும் இதுபோன்ற ரவுடிகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. அதனால், காவலர்களின் கூடுதல் கண்காணிப்பு தேவையாக உள்ளது" என்று தெரிவித்தனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

student grabbed young man collar who had been harassing her and beat him up Viral Video


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->