இமாச்சல அரசு ஊழியர்களுக்குக் கடும் கட்டுப்பாடு...! - அலுவலகத்தில் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை...!
Strict Restrictions Himachal Government Employees Ban Wearing Jeans and T shirts Office
இமாச்சலப் பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணியவும், சமூக ஊடகங்களில் அரசியல் அல்லது மதக் கருத்துகளைத் தெரிவிக்கவும் மாநில அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆடை நெறிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனத் தலைமைச் செயலாளர் சஞ்சய் குப்தா புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து அரசு ஊழியர்களும் அலுவலகம் வரும்போதோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகும்போதோ கண்ணியமான, சுத்தமான மற்றும் தொழில்முறை சார்ந்த 'ஃபார்மல்' உடைகளையே அணிய வேண்டும்.
ஆண்கள் காலர் வைத்த சட்டை, பேன்ட் மற்றும் பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும். பெண்கள் புடவை, ஃபார்மல் சூட்கள், சல்வார், சுரிதார் அல்லது துப்பட்டாவுடன் கூடிய குர்தா போன்ற ஆடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேஷுவல் அல்லது பார்ட்டி உடைகளுக்கு அனுமதி இல்லை.மேலும், அரசு ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள், வலைப்பதிவுகள் அல்லது பொது மேடைகளில் அரசின் கொள்கைகள் குறித்துக் கருத்து தெரிவிக்கக் கூடாது.
அரசியல் மற்றும் மத ரீதியான கருத்துகளைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இந்த விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இமாச்சல அரசு எச்சரித்துள்ளது.
English Summary
Strict Restrictions Himachal Government Employees Ban Wearing Jeans and T shirts Office