தெரு நாய்கள் பிரச்னை: நாடு முழுவதும் புதிய கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
Street Dogs case new order from Supreme Court
இந்தியாவில் தெருநாய் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு புதிய கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மருத்துவமனை வளாகங்கள் போன்ற மக்கள் அதிகமாகச் செல்லும் பொது இடங்களில் நாய்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவது பாதுகாப்பு ஆபத்தாக இருப்பதைக் குறிப்பிட்டது.
இதனால், இவ்விடங்களில் உள்ள அனைத்து நாய்களையும் உடனடியாக அப்புறப்படுத்தி, பாதுகாப்பான முகாம்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவு வழங்கப்பட்டது. நாய்களை பாதிக்காமல், சரியான முறையில் பிடித்து குறிப்பிட்ட முகாம்களில் பராமரிக்க மாநிலங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
நாடு முழுவதும் தெருநாய் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், மக்களின் உயிர் பாதுகாப்பை முன்னிறுத்தியே இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மாநில அரசுகள் அனைத்தும் உடனடியாக இந்த உத்தரவினைப் பின்பற்றி, பொதுமக்கள் கூடும் பகுதிகளில் நாய்கள் காணப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
English Summary
Street Dogs case new order from Supreme Court