தெருநாய்கள் பிரச்சினை மிகவும் ஆபத்தானது' - சுப்ரீம் கோர்ட்டு வேதனை! - Seithipunal
Seithipunal


டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன, இது குழந்தைகளும், முதியவர்களும் ரேபிஸ் நோய்க்கு இரையாகி வருகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு கவலை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் தெரு நாய் தொல்லையானது சமீப காலமாக அதிகரித்து உள்ளது , இந்த தெரு நாய்கள் சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்களை கடித்து விடுவதால் பலர் ரேபிஸ் நோயல் பாதிக்கப்பட்டு மரணம் அடையும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன, இதனை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,பலர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தெரு நாய் தொல்லை அதிகமாக காணப்படுவதால் இதை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டம் தனது அறிவுரையை கூறியுள்ளது.இந்தநிலையில் நாய் கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்படும் சம்பவங்கள் தொடர்பாக ஊடங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. 

இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா, நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது .அதனை  விசாரித்த நீதிபதிகள், "ஒவ்வொரு நாளும், டெல்லியிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன, குழந்தைகளும், முதியவர்களும் இந்த கொடூரமான நோய்க்கு இரையாகி வருகின்றனர்.இது ரேபிஸ் நோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது. 

இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு முன்பு, இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் மிகவும் அச்சுறுத்தக்கூடியது என்றும் மிகவும் ஆபத்தானது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Street dogs are a very dangerous problem Supreme Court pain


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->