ஸ்டெர்லைட் விடுத்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்.. விரைந்து விசாரிக்கவும் முடிவு.!! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டது. தமிழக அரசின் இந்த கொள்கை முடிவுக்கு எதிராக அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் வேதாந்தா குழுமம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் இந்த முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த முறையீட்டில் "ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் இதை நம்பி இருந்த ஊழியர்கள் மற்றும் சார்ந்து இருந்த தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டுள்ளதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 10,000 மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இந்த வழக்கை அரசியல் ரீதியில் பார்க்காமல் உடனடியாக விசாரணைத்து எடுத்துக் கொண்டு வேண்டும் என முறையீடு செய்துள்ளார்.

வேதாந்தா நிறுவனத்தின் இந்த முறையிட்டை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்கனவே பல வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளதால் இந்த மாத இறுதிக்குள் ஏதேனும் ஒரு நாளில் முதன்மை வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்படும் என மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் ஜனவரி மாத இறுதிக்குள் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நடைபெற்று அதன் மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sterlite plant case speedy hearing appeal to Supreme Court


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->