பாகிஸ்தானுக்கு உளவு..அரசு ஊழியர் கைது!
Spy for Pakistan Government employee arrested
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து அந்நாட்டு அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கிய ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரி கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு உலக நாடுகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தன.இதனைத்தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்து ஒழித்தன. மேலும் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.இதனிடையே பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி பல்வேறு நபர்களை உளவுத்துறை கைது செய்து வருகிறது.இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி அரசு அதிகாரி ஒருவரை உளவுத்துறை கைது செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணி புரிந்து வந்த ஷாகுர் கான். சமீபகாலமாக இந்திய உளவு அமைப்புகளால் இவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். அப்போது ஷாகுர் கானுக்கு, பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உளவு அமைப்பினர், ஷாகுர்கானை, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
அப்போது அவரிடம் பாகிஸ்தானுக்கு செல்லும் விசா இருந்ததும், பல முறை அவர் பாகிஸ்தான் சென்று வந்ததும் ,பாகிஸ்தான் சென்று திரும்பியதும், உளவு அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய தகவல்களை அவர் வழங்கி உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ஷாகுர் கான் கைது செய்யப்பட்டார்.
English Summary
Spy for Pakistan Government employee arrested