நெருங்கும் ஓணம் பண்டிகை - சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்க முடிவு.!
special train run at chennai to kollam for onam festival
கேரளாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஓணம். இந்த பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-"சென்னையில் இருந்து கொல்லத்திற்கு பிற்பகல் 3.10க்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 6.10 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06119) ஆக்ஸ்ட் 27, செப்டம்பர் 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து புறப்படும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து சென்னைக்கு காலை 10:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் (வண்டி எண்:06120) ஆக்ஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் புறப்படும்.
இந்தச் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 08.00 மணிக்குத் தொடங்குகிறது.
English Summary
special train run at chennai to kollam for onam festival