விண்வெளியில் செயற்கைக் கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி; விண்வெளி டாக்கிங் செய்த 04-வது நாடான இந்தியா..! - Seithipunal
Seithipunal


விண்வெளி டாக்கிங் செய்த 04-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. ரஷியா, அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்த சாதனையை இந்திய படைத்துள்ளது.

இந்தியாவின் விண்வெளி நிலையத்தை, விண்வெளியில் அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அத்துடன்,  சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் இஸ்ரோ வைத்துள்ளது. இந்தத் திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் (ஸ்பேடெக்ஸ்) நவீன தொழில்நுட்ப ஆய்வு என்கிற, அதாவது 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை'க்காக இஸ்ரோ 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

பல கட்ட முயற்சிகளுக்குப்பின் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி விண்ணில் வைத்தே இந்த 02 செயற்கைக்கோள்களையும் ஒன்றாக இணைத்தது. விண்வெளியில் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள்களை தனித்தனியாகப் பிரித்து ஒன்றிணைக்கும் பணிகளை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

இது தொடர்பான பணி வரும் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என  இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்திருந்தார். இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விண்வெளியில் செயற்கைக்கோள்களைப் பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்தது.

இது குறித்து, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஒவ்வோர் இந்தியனுக்கும் இந்த நிகழ்வு மன மகிழ்ச்சியை அளிக்கிறது.

வருங்காலத்தில் பாரதீய அந்திரிக்சா நிலையம், சந்திரயான்-4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட திட்டங்களை எளிதில் மேற்கொள்ள வழியேற்படுத்தும் வகையில் உள்ளது. பிரதமர் மோடியால் தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவானது மன உறுதியை அதிகரிக்கச் செய்கிறது என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SpaceX project to separate satellites in space is successful


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->