17 நாளாக தொடரும் உண்ணாவிரதம்; சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்..!
Sonam Wangchuks health is in serious condition as her hunger strike continues for 17 days
லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மேரோகொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் 17-வது நாளை எட்டியுள்ளது. தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள சூழலில், அவர் தனது காலவரையற்ற உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
நீட் தேர்வு கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. அதற்கு ஆதரவாக டெல்லியில் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
குறித்த உண்ணாவிரதப் போராட்டம் 17 நாட்களாக தொடர்வதால், பேச முடியாத அளவுக்கு சோனம் வாங்சுக்கின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அவரின் உடல் எடை 8.5 கிலோ குறைந்துள்ளது எனவும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தெரிவித்தது.

இது குறித்து பேசிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளதாவது;
''சோனம் வாங்சுக்கிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், ஆனால் அவர் அதைத் தொடர்வதில் உறுதியாக இருக்கிறார். ஜூலை 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்படவுள்ள பேரணிக்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு சோனம் எங்களிடம் கூறுகிறார். சோனம் வாங்சுக்கும் உண்ணாவிரதம் இருக்கும் மற்றவர்களும் இறந்துவிட வேண்டும் என்று அரசாங்கம் விரும்புவதாக நான் உணர்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சோனம் வாங்சுக்க்கு பல எதிர்க்கட்சித் தலைவர்களும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இது குறித்து கூறுகையில்;
''ஜனநாயகம், மனிதநேயம் மற்றும் சுற்றுச்சூழலின் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்பு சோனம் வாங்சுக்குக்கு உள்ளது. எனவே, ஒட்டுமொத்த உலகிற்கும் அவரின் உயிர் விலைமதிப்பற்றதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க, வியாழக்கிழமை மாலை 05 மணிக்கு ஜந்தர் மந்தருக்குச் செல்ல உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், "சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்து வருவதால், அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. அவர் நாட்டின் சொத்து. எனவே, அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்தை முன்னெடுக்க வேறு வழிகளும் உள்ளன'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Sonam Wangchuks health is in serious condition as her hunger strike continues for 17 days