வீதியில் சோப்பு பொடியை வாரிசென்று விபத்திற்குள்ளாகிய லாரி.. அள்ளிச்சென்ற மக்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மேற்கு வங்கம் மாநிலத்தில் சோப்பு தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்களை ஏற்றுக்கொண்ட லாரி, இன்று காலை திடீரென சாலை விபத்தில் சிக்கியது. இந்த லாரி காலடியா பகுதியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி செல்கையில், அங்குள்ள அசன்சால் பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் லாரி கவிழ்ந்ததால், அதில் இருந்த சோப்பு மூலப்பொருட்கள் சாலையில் கொட்டியது. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் சோப்பு மூலப்பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும், வாகனங்கள் சோப்பினால் வழுக்கி மீண்டும் மற்றொரு விபத்து ஏற்படாமல் இருக்க மணல் தூவப்பட்ட நிலையில், அப்பகுதி வாசிகள் தகவல் அறிந்துகொண்டு சோப்பு பவுடரை பாத்திரத்தில் எடுத்து சென்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soap Lorry Accident in West Bengal


கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்குAdvertisement

கருத்துக் கணிப்பு

2021-ல் தமிழகத்தில் முழு மதுவிலக்கு
Seithipunal