கர்ப்பிணிக்கு கொடுத்த சத்துணவில் 'பாம்பு'...! அங்கன்வாடி மையத்தில் நடந்த பகீர் சம்பவம்...! - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை...! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தின் பந்துர்னா மாவட்டத்தில் உள்ள கார்காட் கம்தி கிராமத்தைச் சேர்ந்த வச்சல பாய் துர்வே என்ற கர்ப்பிணிப் பெண், அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துணவை பெற சென்றுள்ளார்.

அங்கு வழங்கப்பட்ட சத்துணவுப் பொட்டலத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று திறந்து பார்த்தபோது, அதற்குள் இறந்த நிலையில் இருந்த பாம்புக் குட்டி ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அங்கன்வாடி பணியாளர்களுக்கு தகவல் அளித்தனர்.இந்தத் தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.

இந்தச் சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கிராம மக்கள் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட உணவுப் பொட்டலங்களை விநியோகித்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Snake found nutritious food given pregnant woman horrific incident Anganwadi center Officials take action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->