வயநாடு நிலச்சரிவு - மீட்புப் பணியில் களமிறங்கிய மோப்பநாய்கள்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு செல்ல ராணுவ வீரர்கள் பாலம் அமைத்து அதன் மூலம் இடிந்து கிடக்கும் கட்டிடங்களை அகற்றுவதற்காக ஜே.சி.பி. எந்திரங்கள் கொண்டுச் சென்று தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலச்சரிவில், 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் நூற்றுக்கும் அதிகமானவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

அவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப்படையினர் இன்று டிரோன் கேமராக்களை பயன்படுத்தினர். டிரோன்களை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் ஆற்றுப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் பறக்கச் செய்து மாயமான யாரேனும் இருக்கிறார்களா? என்று பார்த்துள்ளனர்.

மேலும், நிலச்சரிவில் மாயமானவர்களை கண்டுபிடிக்க மனித ரத்தத்தில் பயிற்சி பெற்ற போலீஸ் மோப்ப நாயும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நாய்கள் நிலச்சரிவு ஏற்பட்டு புதைந்து கிடக்கும் கட்டிடங்களுக்குள் சென்று ஆட்களை கண்டுபிடித்து வருகின்றன. நேற்று வரைக்கும் மொத்தம் 10-க்கும் மேற்பட்ட உடல்களை கண்டுபிடித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

smiffers dong include vayanadu landslide rescue work


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->