கேரளா : திருவனந்தபுரம் பூங்காவில் 64 விலங்குகள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கரும்புலி, சிறுத்தை, புள்ளி மான்கள் மற்றும் அரிய வகை பாம்புகள் என்று ஏராளமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த பூங்காவிற்கு கேரளா மட்டுமில்லாமல், வெளிமாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இந்த பூங்காவில் வளர்க்கப்படும் சில விலங்குகள் அடிக்கடி பலியாவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார் தொடர்பாக கேரள சட்டசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. 

அந்த கேள்விக்கு கேரள கால்நடைதுறை அமைச்சர் சிஞ்சுராணி பதில் அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட அரிய வகை விலங்குகளில் அறுபத்து நான்கு விலங்குகள் உயிரிழந்துள்ளன. இந்த உயிரினங்கள் உயிரிழந்ததற்கு காரணம் என்ன? என்று கால்நடை துறை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். 

அந்த ஆய்வில் விலங்குகளுக்கு காசா நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் மட்டும் சிறுத்தை, கரும்புலி, புள்ளிமான் போன்ற விலங்குகள் உயிரிழந்துள்ளது. 

மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அவற்றின் உடல்நிலையையும் தினமும் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixty four animals died in thiruvanathapuram zoo


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->