நாட்டில் நிலக்கரி உற்பத்தி 16 % உயர்ந்துள்ளது - மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் தகவல்.! - Seithipunal
Seithipunal


மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- "நாட்டில் நிலக்கரி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக அளவில்லாத வளா்ச்சியை அடைந்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து படிம எரிபொருளை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்படுகிறது. 

இந்தாண்டு, அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் உள்ள காலத்தில் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 69.82 கோடி டன்னாக இருந்தது. 

முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 60.20 கோடி டன்னாக இருந்தது. இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது நிலக்கரி உற்பத்தி 16 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. 

நாட்டில் மின் நுகா்வு தொடா்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் நிலக்கரிக்கான தேவை அதிகரித்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல், நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 73.10 கோடி டன்னாக இருந்து 2021-22-இல் 77.82 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 

இதனால், வருகிற 2024-25-ஆம் நிதியாண்டில் நிலக்கரியை 131 கோடி டன்னாக உற்பத்தி செய்ய நிலக்கரித் துறை அமைச்சகம் இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த இலக்கு 2030-ஆம் நிதியாண்டில் 150 கோடி டன்னாக உயர்வதற்கு வாய்ப்புள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixteen percentage coal production increase in india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->