கர்நாடகாவில் பாஜக பிரமுகர் கொலை வழக்கு; குற்றவாளிகள் 06 பேருக்கு தூக்கு தண்டனை..! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு அக்​டோபர் மாதம் கர்​நாடக மாநிலம் கொப்​பல் மாவட்​டத்​தில் உள்ள கங்​காவதி நகர பாஜக‌ இளைஞர் அணி தலை​வர் வெங்​கடேஷ் குருபரா (35), கங்​காவதி அருகே 06 பேர் கொண்ட கும்​பலால் படு கொலை செய்​யப்​பட்​ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த கொலை குறித்து, வழக்​குப் பதிவு செய்த கங்​காவதி போலீ​ஸார், சிசிடிவி காட்​சிகளின் அடிப்​படை​யில் ரியல் எஸ்​டேட் தொழிலில் ஈடு​பட்டு வந்த ரவி (29), மைலாரி (32) உள்​ளிட்ட06 பேரை கைது செய்யப்பட்டனர். இந்த வழக்​கில் 06 பேருக்கு எதி​ராக 925 பக்க குற்​றப்​பத்​திரி​கையை கொப்​பல் மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​தில் கடந்த 06 மாதங்​களுக்கு முன்பு தாக்​கல் செய்​தனர்.

அதன்படி, வழக்கை விசா​ரித்து வந்த நீதிபதி சாதனந்த நாகப்பா நேற்று தீர்ப்பளித்​துள்ளார். அப்போது அவர் கூறியதாவது;

வெங்​கடேஷ் குருபரா மீதான முன்​பகை காரண​மாக ரவி (29), மைலாரி (32), தன்​ராஜ் (28), பஷீர் (26), சலீம் (30), கங்​காதரா (32) ஆகிய 6 பேரும் திட்​ட​மிட்டு கொலை செய்ததை அரசு தரப்​பில் தக்க ஆதா​ரங்​களு​டன் நிரூபித்துள்ளனர். எனவே, 06 பேருக்​கும் தூக்கு தண்டனை​யும், தலா ரூ.03 லட்​சம் அபராத​மும் விதிக்​கப்​படு​கிறது. அபராத தொகையை வெங்கடேஷ் குருப​ரா​வின் குடும்​பத்​தினருக்கு வழங்க வேண்​டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Six convicts sentenced to death in the murder case of a BJP functionary in Karnataka


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




சினிமா

Seithipunal
--> -->