ஆண்டுக்கு ரூ.40000 திட்டம்! குடும்ப தலைவிகளுக்கான சூப்பர் திட்டத்தை தொடங்கிய சிக்கிம் முதல்வர்!
sikkim CM Prem Singh Tamang women Scheme
சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கான புதிய நலத்திட்டத்தை முதலமைச்சர் பிரேம் சிங் தமங் நேற்று முன்தினம் தொடங்கினார்.
இந்தத் திட்டத்தின் மூலம், தகுதி பெறும் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கப்படும்.
திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு ரூ.128 கோடி ஒதுக்கியுள்ளது. முதற்கட்டமாக, 32,000 குடும்பத் தலைவிகளுக்கு தலா ரூ.20,000 வழங்கப்பட்டுள்ளது. மீதித் தொகை இரண்டாம் தவணையாக வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் சேர தகுதி பெற, பெண்கள் வேலைக்குச் செல்லாதவர்களாக இருக்க வேண்டும். மேலும், குழந்தையை பெற்றிருப்பதும் கட்டாய நிபந்தனையாகும்.
மாநில அரசு, இத்திட்டம் மூலம் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை குறைத்து, பெண்களுக்கு நிதி பாதுகாப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது.
English Summary
sikkim CM Prem Singh Tamang women Scheme