ஏழைகளின் சத்தம் பசவராஜ் காதில் விழவில்லையா? - சித்தராமையா கேள்வி.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தெரிவித்து இருப்பதாவது:- "பெங்களூரு சுதந்திர பூங்காவில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி 141 நாட்களாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அதுமட்டுமல்லாமல், தங்களது கோரிக்கையை நிறைவேற்ற கோரி இதுவரைக்கும் இரண்டு ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் கடந்த 141 நாட்களாக நிரந்தரமாக நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது கோரிக்கைகளை கேட்க கூட யாரும் இல்லை. அவர்கள் கேட்பது ஓய்வூதியம் மட்டுமே. 

அவர்களுடைய கோரிக்கைகள் பற்றி அரசு காது கொடுத்து கேட்க கூடாதா?. ஓய்வூதியம் கேட்டு பலநாட்களாக போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்ப்பதற்கு இன்னும் எத்தனை பேர் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும். 

ஆசிரியர்கள் 141 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டும், அதுகுறித்த தகவல் தங்களது கவனத்திற்கு வரவில்லை என்று அரசு கூறுவதன் மூலம், இத்தனை நாட்கள் இந்த அரசு கோமாவில் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது. அரசு மற்றும் ஆட்சியாளர்களின் காதுகளிலும் எப்போதும் கமிஷன் சத்தம் மட்டும் தான் கேட்கிறது. 

முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அவர்களே, ஏழைகளின் சத்தம் உங்கள் காதில் விழவில்லையா?. இன்னும் சில ஆசிரியர்கள் தங்களது உயிரை இழக்கும் முன்பாக, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

அவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த இரண்டு ஆசிரியர்களின் குடும்பத்திற்கும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah criticizes Karnataka BJP govt in coma


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->