கரூரில் விஜய் மீது செருப்பு வீச்சு பரபரப்பு! விளக்கம் கேட்டு அதிரடி! -உள்துறை அமைச்சகம்
Shoe hurled at Vijay Karur creates stir Action sought after explanation Ministry of Home Affairs
நாட்டின் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு உளவுத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ போன்ற பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கி வருகிறது.அவ்வகையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு கடந்த மார்ச் மாதம் முதல் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால்,அண்மையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் எதிர்பாராத பரபரப்பு. இந்தக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த விஜயை நோக்கி ஒருவரால் செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தையடுத்து, “விஜயின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா?” என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை தெளிவுபடுத்த உள்துறை அமைச்சகம், விஜயின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விரிவான விளக்கத்தை கோரியுள்ளது.
மேலும்,பாதுகாப்பு அதிகாரிகள் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், விஜய்க்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் வலுப்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Shoe hurled at Vijay Karur creates stir Action sought after explanation Ministry of Home Affairs