வெளியுறவு இணைய மந்திரி கொடுத்த அதிர்ச்சி தகவல்! வெளிநாடுகளில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள 10,000 மேற்பட்ட இந்தியர்கள்!!!
Shocking information given by Minister of External Affairs More than 10000 Indians are imprisoned abroad
கேள்வி நேரத்தின்போது பாராளுமன்ற மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி ''கீர்த்தி வர்தன் சிங்'' எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது,"உலகம் முழுவதும் பல்வேறு நாட்டிலுள்ள சிறைகளில் 10,574 இந்தியர்கள் உள்ளனர்.

இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 2,773 இந்தியர்கள் பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,சவுதி அரேபியாவில் 2,379 பேர், நேபாளத்தில் 1,357 பேர், கத்தாரில் 795 பேர், மலேசியாவில் 380 பேர், குவைத்தில் 342 பேர், பிரிட்டனில் 323 பேர், பஹ்ரைனில் 261 பேர் மற்றும் பாகிஸ்தானில் 246 இந்தியர்களும் சிறைகளில் உள்ளனர்.
இதில் 43 இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் மரண தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமீரக நாட்டில் 21 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் பொது மன்னிப்பு கேட்பதற்கான உதவிகளை இந்திய தூதரகங்கள் மூலம் செய்து வருகிறோம்" என தெரிவித்தார்.
English Summary
Shocking information given by Minister of External Affairs More than 10000 Indians are imprisoned abroad