பெங்களூரு தெருவில் அதிர்ச்சி: அரைகுறை ஆடையுடன் வந்த பெண் காவலரை தாக்கி காயம்...!
Shocking incident Bengaluru street woman revealing clothing attacked and injured police officer
பெங்களூரு, கர்நாடகா – கே.ஆர். புரம் ரெயில்வே நிலையம் அருகே நேற்று பரபரப்பான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது. 31 வயது தாமினி (மோகினி) என்ற பெண், தெருவில் அரைகுறை ஆடையுடன் நடந்தபோது, அதிர்ச்சியடைந்த மக்கள் மற்றும் சில இளைஞர்கள் அவரை கேலி, கிண்டல் செய்தனர்.
ஆனால், மோகினி அமைதியாக நடந்து, எந்தவித எதிர்வினையையும் காட்டவில்லை.அப்போது, போக்குவரத்து பணியில் ஈடுபட்டு இருந்த பெண் காவலர் லட்சுமி நரசம்மா, அவரிடம் சென்று, “இப்படித் தீவிர ஆடையில் தெருவில் நடக்க வேண்டாம்; வாகனங்கள் வருகிறன” என எச்சரித்து, ஓரத்தில் செல்லும்படி கூறினார்.

மோகினி அமைதியாக நின்றிருந்ததால், லட்சுமி அவரை மறுமுறை தள்ள முயன்றார். இதையடுத்து, மோகினி அசிங்கமான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகள் கூறியதோடு, லட்சுமியின் முடியை பிடித்து இழுத்து, கீழே தள்ளி தாக்கினார்.
இந்த சம்பவத்தின் போது, மோகினி லட்சுமியின் தடியையும் பறித்து, கடுமையாக தாக்கியதால், லட்சுமியின் முகம் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அக்கம்பக்க மக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வந்தி காவலரை காப்பாற்றினர்.
மேலும், போலீசார் விசாரணை நடத்தி மோகினியை பிடித்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றம் அவருக்கு காவல் விதித்துள்ளது. விசாரணையில், மோகினி மாலத்தீவில் பள்ளிப் படிப்பையும், பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம், சில மாதங்களுக்கு முன் பெங்களூருவில் மேலாடை இல்லாமல் அரை நிர்வாண கோலத்தில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் வீடியோ வெளியானது போல, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் நினைவூட்டுகிறது.
English Summary
Shocking incident Bengaluru street woman revealing clothing attacked and injured police officer