வாக்காளர் பட்டியல் பணியில் அதிர்ச்சி! - அலுவலர் பொதுவெளியில் நிர்வாணம், காணொளி வைரல்...!
Shock during voter list work Officer naked public video goes viral
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், தவனூர் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒருவரும் நேரடியாகப் பங்கேற்று, வாக்காளர்களின் படிவ விவரங்களை பதிவு செய்து கொண்டிருந்தார்.
ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், பொதுமக்கள் முன்னிலையில் அவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி நிர்வாண நிலையில் நின்றார். இந்த அவசர சம்பவத்தை பார்த்த பெண்கள், பொதுமக்கள் எல்லோரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்ததாக தகவல். ஆனால், அந்த காட்சிகள் நேற்று டிவி சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை தூண்டின. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது.
சம்பந்தப்பட்ட அலுவலர் திருத்தப் பணிகளிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார். மேலும் பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொண்டது ஏன் என்பதை விளக்க கேட்டவாறு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்.
English Summary
Shock during voter list work Officer naked public video goes viral