மதுக்கடையை மூடாமல் மது இல்லாத மாநிலம்! அசத்தும் மத்திய பிரதேச முதல்வர்!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தை மது இல்லாத மாநிலமாக்க அம்மாநிலமுதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கட்னியில் நடந்த நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேபோல இதனை மதுபானத்துக்கு தடை விதிப்பதால் மட்டும் செய்துவிட முடியாது. மது குடிப்பவர்களுக்கு மதுபானம் தொடர்ந்து வழங்கப்படும். ஆனால் நாங்கள் மதுபானம் இல்லா மாநிலம் பிரச்சாரத்தை நடத்துவோம். அப்போது குடிப்பவர்கள் மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள். 

இந்த நடவடிக்கையால் மது இல்லாத மாநிலமாக மாற்றி விடுவோம். இந்த தீர்மானத்தை நாங்கள் எடுத்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்.  ஏழை மக்களுக்கு பக்கா வீடுகள் கட்டுவதற்கு பண உதவி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shivraj Singh Chauhan Close Liquor Alcohol Drinking Habit in Madhya Pradesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal