உச்சத்தில் இருந்தபோதும் தனிமைதான்!25 வருட சினிமா வாழ்க்கையில் ஒரு விருது விழாவுக்கும் அழைக்கவில்லை - நடிகை ஷகீலா உருக்கம்!
Even at the peak she was lonely In her 25 year film career she was not invited to a single award ceremony Actress Shakeela Urukkam
பிரபல நடிகை ஷகீலா, சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரையுலக வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், புறக்கணிப்புகள் மற்றும் தனிமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். மலையாளத் திரையுலகில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கூட, சக நடிகர்களிடமிருந்து பொறாமை மற்றும் விலகல் மனப்பான்மையை எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
ஷகீலா தெரிவிக்கையில், தன்னிடம் யாரும் நட்பு பாராட்ட முன்வரவில்லை என்றும், படப்பிடிப்பு தளங்களில் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். மற்ற நடிகர்களுடன் பழக விடாமல், தனக்கென தனி அறை ஒதுக்கப்பட்டதாகவும், இந்த பாகுபாடு காரணமாகவே சொந்த செலவில் 20 கேரவன்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனது 25 வருட சினிமா வாழ்க்கையில் ஒரு விருது விழாவிற்குக் கூட அழைக்கப்படாதது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாக ஷகீலா கூறினார். திறமை உள்ள பல நடிகைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்றும், மும்பையைச் சேர்ந்த நடிகைகளுக்கு கோடி கணக்கில் சம்பளம் வழங்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார். நெல்லூர், விஜயவாடா போன்ற பகுதிகளில் பல திறமையான பெண்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காஸ்டிங் கவுச் அனுபவம் குறித்து பேசும்போது, தனக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏற்படவில்லை என்றும், யாராவது அப்படி கேட்டிருந்தால் எதிர்த்து நின்றிருப்பேன் என்றும் சிரித்தபடி கூறினார். அதே நேரத்தில், அத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் ஆதரவளிப்பேன் என்றும் தெரிவித்தார்.
வெளி உலகம் என்ன சொன்னாலும் தன்னைப் பாதிக்காது, குடும்பமே தனது வாழ்க்கையின் முக்கியமான விஷயம் என்றும் ஷகீலா கூறினார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதையும் நினைவுகூர்ந்த அவர், தன்னை பலரும் ‘அம்மா’ என்று அழைப்பதை ஆச்சரியத்துடனும் உணர்ச்சியுடனும் ஏற்றுக் கொள்வதாக கூறினார்.
English Summary
Even at the peak she was lonely In her 25 year film career she was not invited to a single award ceremony Actress Shakeela Urukkam