இதுக்கு ஒரு முடிவே இல்லையா? 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! பள்ளி ஊழியர் கைது! - Seithipunal
Seithipunal


நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

இந்நிலையில் குறிப்பாக, கோல்கட்டாவில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்குமாறு சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உத்தரபிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளளது, இந்த சம்பவம் அங்கு பெரும் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்  சிறுமி வழக்கம் போல் பள்ளிக்கு சென்று மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது, அந்த தனியார் பள்ளியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி பயந்து போய் தனது பெற்றோரிடம் இது தொடர்பாக தகவல் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதன் பேரில், போலீஸில் புகார் கொடுக்கப்ப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஊழியரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாணவி, பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போதும், எந்த நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual harassment of a 6 year old girl School employee arrested


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->