''அமைச்சராக செந்தில் பாலாஜி''... ஆளுநருக்கு இதில் அதிகாரம் இல்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் பெற முயன்ற போது ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சராக நியமித்தவை எதிர்த்தும் அவரது பதவி நீக்கம் குறித்து ஆளுநர் உத்தரவை திருத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல். ரவி வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் செந்தில் பாலாஜி அமைச்சராகையில் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார். 

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எம்.எல். ரவி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு மனு என்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடை இல்லை என உத்தரவிட்டது. 

மேலும் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு சரியானது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக்க தடை இல்லை எனவும் தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthilbalaji not barred from continuing minister


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->