இந்தியா-வங்கதேச சர்வதேச எல்லையில் படகில் கடத்திவரப்பட்ட ரூ.21 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா-வங்கதேச சர்வதேச எல்லையில் படகில் கடத்திவரப்பட்ட ரூ.21 கோடி மதிப்பிலான தங்கத்தை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தியா-வங்கதேச எல்லையில் தங்கம் கடத்தி வரப்படுவதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் குனர்மத் கிராமத்தில் உள்ள இச்சாமதி ஆற்றின் அருகே பதுங்கியிருந்து, ஆள் நடமாட்டம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினர், உடனடியாக அந்த இடத்தை சுற்றி வளைத்து சர்வதேச எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த படகில் இருந்த 321 தங்க பிஸ்கட்கள் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து, தங்கம் கடத்தி வருவதை தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seizure of smuggled gold at India Bangladesh international border


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->