செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையே எட்டாவது வந்தே பாரத் ரெயில் சேவை இன்று தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ரயில்களில் அதிவேகப் பயணம் மேற்கொள்ள வந்தே பாரத் எனும் திட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி தற்பொழுது வரை இந்தியாவில் நான்கு வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே டெல்லி, வாரணாசி, மும்பை, அகமதாபாத், குஜராத், இமாச்சல பிரதேஷ் உள்ளிட்ட நான்கு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இன்று நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரெயிலை காணொலி காட்சியின் வழியாக காலை 10:30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய சுற்றுலா அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி மற்றும் தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்தவாறு கலந்துகொள்கின்றனர். 

இந்த ரெயில் சேவையானது, இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்படும் எட்டாவது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையாகும். சுமார் 700 கிலோ மீட்டர் அளவிற்கு தெலுங்கு மொழி பேசும் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் முதல் ரெயில் சேவை இதுவே ஆகும். 

இந்த ரெயில், ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரெயில் நிலையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Secunderabad to Visakhapatnam vande barath train service today start


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->