நடுரோட்டில் பரபரப்பு.. மறைந்திருந்த மர்ம நபர்.. சாலையில் போன பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் கண்ணூரில்  நீதிமன்றத்தில் பணி புரியும் பெண்ணின் மீது அவரது இரண்டாவது கணவர் ஆசிட்  வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் கண்ணூர்  தனிப்பரம்பு பகுதியைச் சார்ந்தவர் ஷாகிதா. இவர் அங்குள்ள நீதிமன்றம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். சம்பவம் நடந்த தினத்தன்று ஷாகிதா பணி முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர் ஒருவர்  அவர் மீது மறைத்து வைத்திருந்த ஆசிடை ஊற்றினார்.

இதில் அவரது முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. மேலும் அவருக்கு அருகில் நடந்து சென்றவருக்கும் ஆசிட் அவர் மேல்பட்டதால் காயம் ஏற்பட்டது. ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓட சென்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறையின் விசாரணையில் அப்பெண்ணின் இரண்டாவது கணவர் தான் இந்த கொடூர செயலை செய்தவர் என்பது தெரிந்திருக்கிறது.

இது தொடர்பாக அவரை கைது செய்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது. காவல்துறையின் விசாரணையில் அந்த நபரின் பெயர் அஸ்கர் என்பதும் அவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் ஆய்வக  ஊழியராக பணியாற்றி வருவதும் தெரிந்திருக்கிறது. முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஷாகிதா அஸ்கரை திருமணம் செய்திருக்கிறார். பின்னர் அஸ்கருடன் ஏற்பட்ட  தகராறு தொடர்ந்து மீண்டும் முதல் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அஸ்கர் அவர் மீது ஆசிட் தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.‌


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

second husband throw acid on his wife face with anger


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->