பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நாட்டின் வடமாநிலங்களான பஞ்சாப், அரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த மாநிலங்களில் நேற்று இயல்பைவிட அதிக பனிப்பொழிவு ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. காலை 8 மணியை கடந்தும் இந்த நிலை தொடர்ந்து நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் ஜனவரி 14-ந் தேதி வரை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை மூன்று மணி வரை மட்டும் இயங்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school starting time change in punjab


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->